Thursday, May 25, 2017

இறுதி போட்டியில் அதிரை AFFA அணி வெற்றி.!!

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேசன் AFFA அணி நடத்தும் 14 ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வந்தது

இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை AFFA அணியும், பள்ளத்தூர் அணியும் மோதினர்.

முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாத நிலையில் முடிந்தது, இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் பள்ளதுர் அணி முதல் கோல் போட்டது.

அடுத்த சில வினாடிகளில் பள்ளத்தூர் அணி ஒரு கோல் போட்டதும் ஆட்டம் மிகுந்த பரபரப்புக்குள்ளானது.

ஆட்டம் முடிவிற்க்கு 5 நிமிடங்களே மீதமிருந்த நிலையில் அதிரை AFFA அணியின் வீரர்கள் இரு கோல்களை அடித்து அதிரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர்.

இறுதியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணி வெற்றி பெற்றது.

வெற்றிக்கு காரணமாய் இருந்த அதிரை AFFA அணியின் இளம் நட்சத்திர வீர ஆசிப்பை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தது குறிப்பிடதக்கது..