Friday, December 19, 2014

யாருக்கு வெற்றி ?

தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட வடக்கு,தெற்கு ஆகிய பகுதிகளுக்கான மாவட்ட செயலாளர் தேர்தல் இன்று தற்போது 10.00 மணிக்கு துவங்கி விறுவிறுப்புடன் ஒட்டு பதிவு நடைபெற்று வருகிறது.

இதில் தஞ்சை உட்பட்ட ஒன்றிய செயலாளர்,நகர செயலாளர்,ஒன்றிய பிரிதிநிதி,மாவட்ட பிரிதிநிதி ஆகியோர் அவர்களது வேட்பாளர்களுக்கு ஒட்டு பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நமது அதிரை வெப்ஸ் செய்தியாளர் தரும் கூடுதல் தகவல் அண்ணா அறிவாலயம் முழுவதும் திமுக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குழுமி உள்ளனர்.இதில் அதிரை திமுக நிர்வாகிகளை அதிகமாக காணமுடிகிறது.

மேலும் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரும் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியுமான SS.பழனிமாணிக்கம் ஆதரவுடன் அவரது தம்பி SS.ராஜ்குமார் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment