Saturday, January 10, 2015

2013-14ம் ஆண்டு அதிரை பேரூராட்சிக்கு கிடைத்த நிதி விபரம் வெளியீடு!


கடந்த 2013-14ம் ஆண்டுகளில்  அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய நிதி குறித்த விபரங்கள் தற்பொழுது கிடைத்துள்ளன. 

இதில் திட்ட பணிகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பிலிருந்து அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு 94.21 இலட்சம் நிதி கிடைத்துள்ளதாக பேரூராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும் ஏனெனில் 2012-13ம் ஆண்டுகளில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு திட்ட பணிகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய நிதி 1 கோடியே 69.9 இலட்சம் ஆகும். 

ஆனால் 2013-14ம் நிதியாண்டில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு திட்ட பணிகளுக்காக வெறும் 94.21 இலட்சம் மட்டுமே மத்திய மாநில அரசுகள் வழங்கியுள்ளன. இதேநிலை நடப்பு நிதியாண்டிலும் தொடரும் பட்சத்தில் அதிரையின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment