Tuesday, September 27, 2016

அதிரை அருகே பயங்கரம்! லாரி ஏறியதில் நடந்துசென்றவர் உடல் நசுங்கி மரணம்

img_1096

அதிரையை அடுத்த  தம்பிக்கோட்டையை சேர்ந்த வீரா மற்றும் வீரயன் ஆகியோர் இன்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியதில் வீரயன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்கள் உடலை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும் வீரா மேல்சிகிச்சைக்காக வேண்டி தஞ்சாவூர் அனுப்பிவைக்கப்பட்டார்.
இதுகுறித்து அதிரை காவல்துறை தரப்பில் கூறுகையில் “இரவுநேரத்தில் சரிவர தூங்காமல் லோடு ஏற்றிவந்ததால் லாரியை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். தற்பொழுது நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.” என்றனர்.

No comments:

Post a Comment