Friday, October 28, 2016

அதிரையில் பா.ஜ.க அரசை கண்டித்து ம.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்பு ! ( படங்கள் )


இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் முஹம்மது செல்லராஜா தலைமை வகித்தார். இதில் மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில பொதுச்செயலரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமாகிய எம். தமீமுன் அன்சாரி எம்எல்.ஏ கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஃப்ஐ ஆதரவு:
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில் அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டார்கள்.

ஆர்ப்பாட்ட முடிவில் மாநில செயலர் நாச்சிகுளம் தாஜுதீன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

இதில் மஜக மாநில துணைச்பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் சாகுல், துணைச் செயலர்கள் அபு பைதா, புரோஸ் கான், அப்துல் கனி உட்பட மஜகவினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.






No comments:

Post a Comment