Monday, October 3, 2016

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்

முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
சிகிச்சையை அடுத்து முதல்வர் குணமடைந்து வருகிறார். முதல்வருக்கான சிகிச்சையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment