Thursday, November 3, 2016

அதிரையில் இன்று 11 மி.மீ மழை பதிவு !


தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினம் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் தொடர் மழை பெய்தது. தற்போது வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகின்றன.

இன்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிரையில் 11 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பேராவூரணி 29 மி.மீ, பட்டுக்கோட்டை 5 மி.மீ, மதுக்கூர் 8.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

No comments:

Post a Comment