நாடா புயல்.. அவசர உதவிகளுக்கு கட்டணமில்லா தொடர்பு எண் அறிவிப்பு - தமிழக அரசு
'நாடா' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்
'நாடா' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
15 அறிவுறுத்தல்கள்
1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.
2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.
3. புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.
4. கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.
5. தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.
6. நீர்நிலைகள் மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.
7. சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.
8. நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.
9. குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.
10. மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
11. மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.
12. அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாக எதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம்.
13. அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.
14. மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.
15. பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும்.
இவ்வாறு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு
'நாடா' புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய இரு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் ஆகிய இரு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இந்த விடுமுறையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'நாடா' புயல்
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'நாடா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு மேலும் வலுப்பெற்று புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு 'நாடா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 'நாடா' புயல் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் டிசம்பர் 2-ம் தேதியன்று வேதாரண்யம் - புதுச்சேரிக்கு இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
சென்னையில் நாளை முதல் மழை
அவர் மேலும் கூறும்போது, 'நாடா' புயல் காரணமாக சென்னையில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பசிக்கிறது பணமில்லை என்று முழங்கிய ஸ்டாலின் கைதாகி விடுதலை
சென்னை: ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராஜாஜி சாலையில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ஸ்டாலின் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். பணமில்லை பணமில்லை ஏ.டி.எம்-ல் பணமில்லை, வங்கியில் பணமில்லை என்று ஸ்டாலின் கோஷமிட்டார். மோடி அரசும் சரியில்லை, ஜெயலலிதா அரசும் சரியில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் முழக்கமிட்டார்
பணம் இருந்தும் பசிக்கிறது, நாடு முழுவதும் மக்கள் தவிக்கின்றனர் என்றும், வாழ விடு, வாழ விடு நாட்டு மக்களை வாழவிடு என்றும் ஸ்டாலின் கோஷமிட்டார். மேலும் மக்கள் பிரச்சனை தீரும் வரை போராடுவோம், மத்திய அரசை கண்டித்து போராடுவோம் என்றும் அவர் கூறினார். திருமணம் செய்ய பணமில்லை, மருந்து வாங்க பணமில்லை என்றும் ஸ்டாலினுடன் சேர்ந்து தொண்டர்களும் முழக்கமிட்டனர். ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது திமுகவினர் மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல. நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர் ஒருங்கிணைந்து போராட்டம் செய்து வருகின்றனர். கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு கட்சியினர் மட்டும் நடத்தும் அரசியல் போராட்டமல்ல நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய அரசைக்கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் இந்தியன் வங்கியை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்து அருகில் இருந்த மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மத்திய பாஜக அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றதாக கூறினார். மத்திய அரசு எந்த வித முன்னேற்றபாடும் செய்யாமல் பணம் செல்லாது என்று அறிவித்தாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து ஸ்டாலினின் 7 அம்ச சாடல்
மோடி அரசு 85 கோடி மக்கள் மீது போர் தொடுத்துள்ளதாக குற்றம்சாட்டிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ரூபாய் நோட்டு நடவடிக்கையை ஒட்டி அதிருப்திகளை அடுக்கினார்.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் 7 அம்சங்கள்:
* கடந்த 20 நாட்களாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைப் பார்க்கும்போது நவம்பர் 8-ம் தேதியை சுனாமி ஏற்பட்ட நாளாகவே மக்கள் பார்க்கிறார்கள்.
* முதலில் 3 நாள்களில் நிலைமை சீராகிவிடும் என மத்திய அமைச்சர்கள் கூறினர். ஆனால், இப்போது 50 நாள்கள் பொறுத்திருக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்கிறார். சிறு வியாபாரிகள், பூ விற்பவர்கள், தெருவோர வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் என பலதரப்பட்ட மக்களும் சொல்ல முடியாத துன்பத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
* சாமானிய மக்களால் காய்கறிகள், பால், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியவில்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை.
* டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு அரசு, பொது, தனியார் துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என கோடிக்கணக்கானோருக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. இவர்களுக்கான ஊதியத்தை வங்கிக் கணக்கில் சேர்த்தால் பணம் எடுக்க வங்கிகள், ஏ.டி.எம்.களில் மக்கள் கூட்டம் அலைமோதும் ஆபத்து உள்ளது.
* நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார். ஆனால், இதுவரை ரூ.15 கூட டெபாசிட் செய்யவில்லை.
* இந்தியாவில் சுமார் 85 கோடி பேர் கிராமங்களில் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடையாது. அவர்கள் எப்படி ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்ய முடியும்?
* மோடி அரசு 85 கோடி மக்கள் மீது போர் தொடுத்துள்ளது. வளர்ச்சி என்ற கோஷத்தை முன்வைத்து மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், கடந்த 20 நாட்களாக வளர்ச்சி முடங்கியுள்ளது. மக்களின் சிரமங்களைப் போக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
ஏடிஎம்கள் முடங்கியதால் மக்கள் பாதிப்பு: வங்கிகளுக்கு 2 நாள் விடுமுறை
வங்கிகள் திணறல்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களின் பண மதிப்பு நீக்கப்பட்ட தாக மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டு களை மாற்றி புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய நோட்டுகள் போதிய அளவு அச்சடிக்கப்படாததால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இத னால் மக்களுக்கு தேவையான பணத்தை வழங்கமுடியாமல் வங்கி கள் திணறின.
இந்நிலையில், 4-வது சனிக் கிழமையான நேற்றும், ஞாயிற்றுக் கிழமையான இன்றும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாட்களாகும். வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் ஏடிஎம்களும் பணமின்றி முடங்கின. சென்னையில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. மைலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில ஏடிஎம்களில் மட்டுமே நேற்று பணம் கிடைத்தன. அதுவும் காலையில் சென்றவர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
பணம் கிடைத்த ஏடிஎம்களிலும் 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்தன. இதனால் அந்தப் பணத்தை எடுத்தவர்களும் சில்லறை கிடைக்காமல் தவித் தனர்.
இதுகுறித்து, பாரிமுனை சேர்ந்த குமார் என்பர் கூறும்போது, “பெரும்பாலான வங்கி ஏடிஎம்களில் இன்று (நேற்று) பணம் கிடைக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள 20 வங்கி ஏடிஎம்களில் 2 வங்கி ஏடிஎம்மில்தான் பணம் கிடைத் தது. அதுவும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே கிடைத்ததால் அதை மாற்ற முடியவில்லை” என்றார்.
கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு (படங்கள்)
![]() |
கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு |
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் ஷரிஅத் சட்டத்தை ஒழித்துவிட்டு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர ஆளும் பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்களை இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வருகின்றன. அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றினைந்து தங்கள் எதிர்ப்பை இதில் தெரியப்படுத்தினர். இதில் அதிரையில் இருந்து ஏராளமான வாகனங்கள் அந்தந்த முஹல்லாக்களால் ஏற்பாடு செய்யப்பட்டன.

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு






கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு
கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். சோவியத் யூனியன் பாணியில் கம்யூனிஸத்தை ஆதரித்தவர் காஸ்ட்ரோ. புரட்சி மூலம் கியூபாவின் ஆட்சியைப் பிடித்த காஸ்ட்ரோ, கடந்த 1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அதன்பிறகு, 2008-ம் ஆண்டு வரை கியூபா அதிபராக இருந்தார். சுமார் 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தார். உலகிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த தலைவர் என்ற பெருமையும் இவருக்குள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகிய ஃபிடல் காஸ்ட்ரோ, தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா அதிபராக்கினார். அதன்பின் அவரது உடல்நிலை வயது பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார். இத்தகவலை அதிபர் ரவுல் காஸ்ட்ரோ கியூபா அரசு தொலைக்காட்சியில் தழுதழுத்த குரலில் அறிவித்தார். ரவுல் கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை இரவு 10.29 மணிக்கு கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ காலமாகி விட்டார்’’ என்றார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகள் உடல்நலம் குன்றியிருந்த ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக கியூபாவின் அதிபராக பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ கடந்து வந்த பாதை இதுதான்:
1926, ஆகஸ்ட் 13: கிழக்கு கியூபாவில் உள்ள பிரனில் ஸ்பெயின் நிலச்சுவாந்தாருக்கும், கியூபா தாய்க்கும் 3-வது குழந்தையாக பிறந்தார். பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவராக திகழ்ந்தார்.
1953, ஜூலை 26: கியூபாவின் ராணுவப் படைகளுக்கு எதிராக பிடல் காஸ்ட்ரோ தொடுத்த தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஆதரவாளர்களுடன், காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.
1956, டிசம்பர் 2: மெக்ஸிகோவில் இருந்து தப்பியதும் 81 போராளிகளுடன் கிரான்மா என்ற கப்பல் மூலம் தென்கிழக்கு கியூபாவுக்கு வந்தடைந்தார். பின்னர் சியாரா மெஸ்டிரா மலைகளில் இருந்தபடி 25 மாதங்கள் ராணுவத்துக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கினார்.
1959, ஜனவரி 1: ராணுவ சர்வாதிகாரி பல்ஜெனிசியோ படிஸ்டா நாட்டை விட்டு தப்பியோடினார். பின்னர் ஜனவரி 8-ம் தேதி காஸ்ட்ரோ வெற்றி உற்சாகத்துடன் நாட்டுக்குள் நுழைந்தார். பிப்ரவரியில் கியூபாவின் பிரதமராக பதவியேற்றார்.
1959, ஏப்ரல் 15-27: அமெரிக்காவில் அதிபர் ரிச்சர்டு நிக்ஸனை சந்தித்தார்.
1960: சோவியத் யூனியனுடன் ராஜாங்க ரீதியிலான உறவை நிர்மாணித்தார்.
1961: கியூபாவுடனான ராஜாங்க உறவுகளை அமெரிக்கா முறித்துக் கொண்டது.
1961, ஏப்ரல் 17-19: அமெரிக்க ஆதரவுடன் பே ஆப் பிக்ஸ் பகுதியில் நடந்த படையெடுப்பில் எதிர்ப்பாளர்கள் 1,400 பேரை விரட்டியடித்து வெற்றிப் பெற்றார்.
1962, பிப்ரவரி 13: அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி கியூபாவுக்கு எதிராக ஏற்றுமதி தடை விதிக்கும் ஆணை பிறப்பித்தார்.
1962, அக்டோபர்: கியூபாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியன் ஏவுகணைகளை நிலைநிறுத்தியது. பின்னர் கியூபா மீது படையெடுப்பு இல்லை என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கியதும், ஏவுகணைகளை சோவியத் யூனியன் வாபஸ் பெற்றது.
1963 ஏப்ரல்: முதல் முறையாக சோவியத் யூனியன் சென்றார் காஸ்ட்ரோ.
1965: கியூபா கம்யூனிச கட்சியை நிறுவினார் காஸ்ட்ரோ.
1990: சோவியத் யூனியன் உடைந்ததால் கியூபா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது.
1995: முதல்முறையாக சீனா சென்றார் காஸ்ட்ரோ.
1998: கியூபாவுக்கு வந்த வாடிகன் போப் ஜான் பாலை வரவேற்றார் காஸ்ட்ரோ.
2003, மார்ச்: அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் 75 பேரை கைது செய்வதற்கு காஸ்ட்ரோ உத்தரவு பிறப்பித்தார்.
2006, ஜூலை 31: ஆபத்தான குடல் அறுவை சிகிச்சை காரணமாக தனது பதவியை சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் தற்காலிகமாக ஒப்படைத்தார் காஸ்ட்ரோ. அப்போது அவருக்கு வயது 75.
2006, டிசம்பர் 3: உடல் நலக்குறைவு காரணமாக தனது 80-வது பிறந்த தினத்திலும், கிரான்மா கப்பல் மூலம் கியூபா வந்தடைந்த 50-வது ஆண்டுவிழாவில் பங்கேற்கவில்லை.
2008, பிப்ரவரி: கியூபாவின் அதிபராக ரால் காஸ்ட்ரோ நியமிக்கப்பட்டார்.
2014, டிசம்பர் 17: அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவுக்கு வருகை தந்து இரு நாட்டுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
2016, நவம்பர் 25: 90 வயதில் காஸ்ட்ரோ காலமானார். கியூபா கண்ணீரில் மூழ்கியது.
பழைய 500 ரூபாயில் மொபைல் ரீசார்ஜ்: மத்திய அரசின் அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு
பழைய 500, 1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்ற அளிக்கப் பட்ட அவகாசம் நேற்று முன் தினம் முடிவுக்கு வந்தது.
பெட்ரோல் நிலையம் உள் ளிட்ட இடங்களிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என அறிவிக்கப் பட்டது. எனினும் கல்விக் கட்டணம், அரசுத் துறை சார்ந்த சிலவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், மொபைல் போன் ரீசார்ஜ் கட்டணத்துக்கும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு பழைய 500 ரூபாய் தாள்களை, டிசம்பர் 15-ம் தேதி வரை பொதுமக்கள் பயன்படுத்தலாம். எனினும், பழைய 1000 ரூபாய் தாள்களைப் பயன்படுத்த அனுமதியில்லை.
இதுகுறித்து டெல்லியில் உள்ள செல்லுலார் ஆபரேட்டர் கள் சங்க தலைவர் ராஜன் மேத்யூஸ் கூறும்போது, ‘‘500, 1000 நோட்டுகள் தடை செய்யப்பட்ட பிறகு, பிரீபெய்டு மொபைல் சேவைகளின் ரீசார்ஜ் மற்றும் டாப்-அப் வர்த்தகம் 30 முதல் 50 சதவீதம் வரை சரிந்துவிட்டது. புதிய ரூபாய் தாள்கள் புழக்கத் துக்கு வரும் வரை, பழைய 500, 1000 ரூபாய் தாள்களை ரீசார்ஜ் கட்டணங்களுக்காக பெற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். இதனை மத்திய அரசு ஏற்றிருப்பதை வரவேற்கிறோம். அன்றாட தேவைகளுக்கு போதிய அளவில் பணப்புழக்கம் மக்கள் மத்தியில் உருவாகும் வரை, 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெற, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும்’’ என்றார்.
அதிரையில் பரபரப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!
![]() |
அதிரையில் பொதுமக்கள் சாலை மறியல் |
அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாள்களாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுக்க முடியாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கி மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன. பணத் தட்டுப்பாடு நீடிப்பதால், பெரும்பாலான வங்கிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கி மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன. பணத் தட்டுப்பாடு நீடிப்பதால், பெரும்பாலான வங்கிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் அதிரை கனரா வங்கியில் மக்களுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிரை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து வங்கி நிர்வாகம் சிலரை அழைத்து இன்று 300 நபர்களுக்கு மட்டும் 2000 ரூபாய்களை வழங்குவதாகவும், மற்றவர்கள் திங்கள் அன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியது. ஆனால் 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடந்ததால், வங்கியின் இந்த முடிவையும் ஏற்க மறுத்துள்ளனர். மத்திய அரசின் அடாவடி அறிவிப்பால், தாங்கள் சம்பாதித்த பணத்தை எடுப்பதற்கே மக்கள் அவலப்படும் நிலை இங்கு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த, அதிராம்பட்டினம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் 150 பேருக்கு ரூ 4000 வீதம் இன்று வெள்ளிக்கிழமை பணம் வழங்கினர். மீதமுள்ள 350 பேருக்கு டோக்கன் வழங்கி வரும் திங்கள்கிழமை பணம் பெற்றுச்செல்ல அறிவுறுத்தினர். இதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.![]() |
அதிரையில் பொதுமக்கள் சாலை மறியல் |
![]() |
அதிரையில் பொதுமக்கள் சாலை மறியல் |
இனி பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாது: பயன்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
பழைய நோட்டுகளான ரூ;500, ரூ.1000 ஆகியவற்றை வங்கிகளில், தபால் நிலையங்களில் கொடுத்து புதிய நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை வியாழன் இரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
ஆனால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
அதாவது தண்ணீர், மின்கட்டணங்கள், அரசு மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள், ரயில்வே கவுண்டர்களில் பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரீபெய்ட் மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்ய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.
வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் பழைய நோட்டுகளை கொடுத்து தினசரி அடிப்படையில் மாற்றி கொள்வது குறைந்து வந்ததால் இன்றுடன் நோட்டுகள் மாற்றுவது முடிவுக்கு வருகிறது என்று முடிவெடுத்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் வங்கி, தபால் நிலையக் கணக்குகளில் இந்த பழைய நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிவரை டெபாசிட் செய்து கொள்ளலாம் என்பதில் மாற்றமில்லை.
மேலும் மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் மாணவர் ஒருவருக்கு ரூ.2000 வரை செலுத்த பழைய ரூ.500 தாள்களைப் பயன்படுத்தலாம்.
சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதன் பிறகும் கூட டிசம்பர் 15-ம் தேதி வரை பழைய ரூ.500 தாள்களைக் கொண்டு சுங்கக் கட்டணம் செலுத்தலாம்.
வெளிநாட்டினர் தங்கள் நாட்டுப் பணத்திற்கு ரூ.5000 வரை தங்கள் பாஸ்போர்ட்டை வங்கிகளில் காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
அதாவது தண்ணீர், மின்கட்டணங்கள், அரசு மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள், ரயில்வே கவுண்டர்களில் பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரீபெய்ட் மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்ய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.
வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் பழைய நோட்டுகளை கொடுத்து தினசரி அடிப்படையில் மாற்றி கொள்வது குறைந்து வந்ததால் இன்றுடன் நோட்டுகள் மாற்றுவது முடிவுக்கு வருகிறது என்று முடிவெடுத்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் வங்கி, தபால் நிலையக் கணக்குகளில் இந்த பழைய நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிவரை டெபாசிட் செய்து கொள்ளலாம் என்பதில் மாற்றமில்லை.
மேலும் மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் மாணவர் ஒருவருக்கு ரூ.2000 வரை செலுத்த பழைய ரூ.500 தாள்களைப் பயன்படுத்தலாம்.
சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதன் பிறகும் கூட டிசம்பர் 15-ம் தேதி வரை பழைய ரூ.500 தாள்களைக் கொண்டு சுங்கக் கட்டணம் செலுத்தலாம்.
வெளிநாட்டினர் தங்கள் நாட்டுப் பணத்திற்கு ரூ.5000 வரை தங்கள் பாஸ்போர்ட்டை வங்கிகளில் காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில் அதிரையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடத்தப்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான முடிவுகள் வெளியாகின.
அதன்படி, தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 136-ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் வெற்றி மூலம் அவர் தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அரவக்குறிச்சியில் மட்டும் ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தஞ்சையில் ரங்கசாமி வெற்றி:
தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார். 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 97,855 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 71,402 வாக்குகள் பெற்றார். 26,483 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார்.
தஞ்சாவூரில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரங்கசாமி கூறும்போது, "என்னை ஆதரித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி தமிழக முதல்வரின் சாதனைத் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் வெற்றி:
திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் 1,12,988 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் 70,361 வாக்குகள் பெற்றுள்ளார். 42,627 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக 6,453 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தேமுதிக 3,901 வாக்குகள் பெற்று 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வெற்றி:
அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 23,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செந்தில் பாலாஜி பெற்ற வாக்குகள்- 88,068. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி- 64,395 வாக்குகள் பெற்றார். இத்தொகுதியில் பாஜக 1,179 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தேமுதிக- 1070 வாக்குகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.
வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, "முதல்வர் ஜெயலலிதா என்றும் மக்கள் பக்கம் நிற்பவர். அதனாலேயே மக்கள் அவருக்கு வெற்றியை பரிசளித்துள்ளனர்" என்றார்.
இந்நிலையில் வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று அதிரை பேருந்து நிலையத்தில் அதிரை அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதில் நகர செயலாளர் பிச்சை, நகர துணை செயலாளர் தமீம், நகர பாசறை செயலாளர் அஹமது தாஹிர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட அதிமுக தொண்டர்கள் இந்த கொண்டாட்டத்தில் உடனிருந்தன.
கும்பகோணம் பொது சிவில் சட்ட பொதுகூட்டத்திற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஆதரவு!
அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதன் இளைஞர் அமைப்பு இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டம் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து கும்பகோணத்தில் வரும் 26-11-2016 அன்று சனி கிழமை மாலை5 மணியளவில் நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு செல்வதற்கான வாகன ஏற்பாடு செய்வதற்க்கு எல்லா பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் பள்ளிகளில் அவரவர்களுடைய பெயரை முன் கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளபட்டது.இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், சங்க இளைஞர் அமைப்பு நிர்வாகிகள், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கான்பூர் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது; 150 பேர் படுகாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்
உ.பி.யில் இன்று காலை வந்து கொண்டிருந்த இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ம.பி. மாநிலம் இந்தூரில் இருந்து பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவிற்கு சென்று கொண்டிருந்தது இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ். இதில் பயணம் செய்து கொண்டிருந்த பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது, உ.பி.யின் கான்பூரில் உள்ள ஊரகப்பகுதியின் புக்கரையான் அருகே விடியற்காலை கடந்த ரயிலில் திடீர் என விபத்து ஏற்பட்டது.
சரியாக 3.10 மணிக்கு அதன் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கத் துவங்கின. தொடர்ந்து அடுத்தடுத்து 14 ரயில் பெட்டிகளும் ஒன்றன் மீது ஒன்றாக மோதி நசுங்கின. இதில், உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 65 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 150-க்கும் அதிகமான பயணிகள் படுகாயம் அடைந்து 100 கி.மீ தொலைவிலுள்ள கான்பூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து உ.பி.யின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரலான தல்ஜித் சிங் சவுத்ரி 'தி இந்து'விடம் கூறுகையில், ''முன்பகுதியில் இருந்த இரு பொதுபயணிகள் பெட்டி, 4 குளிர்சாதன பெட்டி மற்றும் எஸ்-1 முதல் எஸ்-6 வரையிலான ரிசர்வ் உட்பட 14 பெட்டிகள் மிகவும் மோசமாக நசுங்கியுள்ளன. எஸ்-7 முதல் எஸ்-12 வரையிலான பெட்டிகள் பாதுகாப்பாக உள்ளன. இதில் இருந்த பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதில் சிக்கிய பயணிகளை மீட்க பல பெட்டிகளை கேஸ் கட்டரால் வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருட்டில் தடைபட்டிருந்த மீட்புப் பணிகள் விடியலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன'' எனத் தெரிவித்தார்.
உ.பி. முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் தம் நேரடியாகத் தலையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். உ.பி.யின் லக்னோவில் முகாம் இட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உடனடியாக புக்கரையான் அடைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவியாக, உ.பி. போலீஸ், மத்திய பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் 250 வீரர்களும் மீட்புப்பணியில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.
விபத்து ரயிலில் மீட்கப்பட்ட பயணிகள் பத்திரமாக வீடு திரும்பும் பொருட்டு உ.பி. மாநில அரசின் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ம.பி.யின் இந்தூரில் கிளம்பிய இந்த அதிவிரைவு ரயில் தாமதம் இன்றி வழக்கமான நேரத்தில் அந்த இடத்தை கடக்க வந்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இந்த பயங்கர ரயில் விபத்தின் மீது மத்திய ரயில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனது உத்தரவில் அவர் கூறி உள்ளார்.
இது குறித்து பிரபு, ''ரயில் துறை உயர் அதிகாரிகள் குழுவை உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கான்பூரை சுற்றியுள்ள தொகுதிகளின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களையும் அங்கு உதவ வேண்டி விரைந்துள்ளனர். இந்த சோகமான சம்பவத்தில் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது'' என தெரிவித்துள்ளார்.
இழப்பீடு தொகை அறிவிப்பு
ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு உ.பி. முதல்வர் அகிலேஷ் தலா ரூபாய் ஐந்து லட்சம் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 மற்றும் சிறிய காயம்பட்டவர்களுக்கு ரூபாய் 25,000 இழப்பீடு தொகையாக அறிவித்துள்ளார்.
ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் விபத்தில் உயிர் இழந்த பயணிகளுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். இதில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் அளிப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசு சார்பில் ரூபாய் 3.5 லட்சம் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் என மத்திய ரயில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து இன்னும் முழுமையாக பயணிகள் மீட்கப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணியில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வானிலை முன்னறிவிப்பு: நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், ''குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பூமத்தியரேகை, இந்தியப் பெருங்கடல் மற்றும் இலங்கை கடற்கரை பகுதியையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி ராமேஸ்வரம், பாம்பன், குழித்துறையில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் நவ.24-ல் மனிதச் சங்கிலி போராட்டம் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திட்டமிடப்படாத நோட்டு உத்தியால் இன்னலுக்கு ஆளான மக்கள் துயரங்களை நீக்க மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரியும், இவ்விவகாரத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் வரும் 24-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தப்படும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ""மத்திய பா.ஜ.க. அரசு, "அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி" என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, திடீரென்று 8-11-2016 அன்று மாலையில் செய்த அறிவிப்பின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை.
ஏழையெளிய மக்கள், அன்றாடங்காய்ச்சிகள், வேலைகளுக்கும் செல்ல முடியாமல், தங்களிடம் உள்ள ஒரு சில ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன்னால் பல மணி நேரங்கள் "கியூ"வில் நிற்கின்ற கொடுமைகள் குறைந்தபாடில்லை. வியாபாரிகள் எந்தவிதமான வியாபாரமும் இல்லாமல் தங்கள் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கின்றனர்.
பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் ஏழையெளிய, நடுத்தர மக்களின் துன்பங்களைக் களைய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வாதாடிய போதிலும், பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து எந்தப் பதிலும் கூறவில்லை.
மற்ற மாநில முதல்வர்கள் இந்தப் பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எனவே தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 24-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தப்படும்.
இந்த மாபெரும் மனிதச் சங்கிலியில் கழகத் தோழர்களும், கட்சி சார்பற்ற பொது மக்களும், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட அனைவரும் பங்கேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஜாகீர் நாயக் மீது எப்.ஐ.ஆர். வழக்குப் பதிவு
ஜாகிர் நாயக்கின் அமைப்பான இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையை மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக தடை செய்திருந்தது. அது சட்டவிரோத அமைப்பு என்ற அடிப்பையில் தடைசெய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையின் 10 இடங்களில் தேசிய புலனாய்வுக் கழகம் அதிரடி சோதனைகளை மேற்கொண்டது. இதில் இல்லங்களும், அலுவலகங்களும் கூட அடங்கும்.
இந்நிலையில் ஜாகிர் நாயக் மற்றும் பிறர் மீது தேசிய புலனாய்வுக் கழகம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. அதாவது சட்ட விரோத அமைப்பின் உறுப்பினராக இருப்பது மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளடங்கிய சட்டப்பிரிவுகளில் இவர் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை இந்துக் கடவுகள்களை அவதூறு செய்தும், அல் கய்தா பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை உயர்த்தியும் அறிக்கைகள் வெளியிட்டது இந்த அமைப்பின் மீதான நடவடிக்கைகளுக்கு பிரதான காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் மத அடிப்படையில் மக்களிடையே ஒற்றுமையைக் குலைத்து அவர்களிடையே பகைமையை வளர்ப்பதாகவும் ஜாகிர் நாயக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நான்கு தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
Unknown9:58:00 AM4 தொகுதி தேர்தல், அரவக்குறிச்சி, இந்தியா, தஞ்சை, தமிழகம், தேர்தல், மதுரை
No comments:
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு சில செய்தித் துளிகள்:
* காலை 9 மணி நிலவரப்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் 15% வாக்குப்பதிவானது, அரவக்குறிச்சியில் 21%, தஞ்சையில் 15%, நெலித்தோப்பில் 15% வாக்குப்பதிவானது.
* நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதியில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன் என நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
* அரவக்குறிச்சி மலைக்கோவிலூர் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தடைபட்டது.
* திருப்பரங்குன்றத்தில் 2 வாக்குச்சாவடிகளில் சரியாக இயங்காத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வேறு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
* திருப்பரங்குன்றத்தில் 291 வாக்குச்சாவடிகளிலும் எவ்வித தாமதமும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் தெரிவித்தார்.
* தஞ்சாவூரில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணி நிலவரப்படி 8% வாக்குபதிவாகியிருந்தது
* அரவக்குறிச்சியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பள்ளப்பட்டியில் பெருமளவில் முஸ்லிம் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
பண விநியோகம் காரணமாக ரத்து:
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக, தேர்தல் ஆணையத் தால் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (நவ.19) நடைபெறுகிறது. தஞ்சாவூர் தொகுதியில் 14 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி தொகுதியில் 39 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். திருப்பரங் குன்றம் தொகுதி எம்எல்ஏ சீனிவேல் மரணம் அடைந்ததால் அத்தொகு திக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாதுகாப்பு:
தஞ்சாவூர் தொகுதியில் 88 வாக்குப்பதிவு மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன. இதில், 24 மையங்களில் உள்ள 48 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள 245 வாக்குச் சாவடி மையங்களில் 67 பதற்றமான வையாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டு, வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட உள்ளது.
ஏதேனும் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட்டால் அந்தப் பகுதிகளுக்கு விரைந்து செல்வ தற்காக மத்திய பாதுகாப்புப் படையினரைக் கொண்ட 13 அதிவிரைவுப் படைகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. இதுதவிர இன்ஸ் பெக்டர்கள் தலைமையில் 50 அதிரடிப்படை, டிஎஸ்பிக்கள் தலை மையில் 20 அதிரடிப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் தொகுதி யில் 291 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 1,396 பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்கு 5 துணை ராணுவப் படை யினர், 1,773 போலீஸார் தொகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லித்தோப்பு
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடை பெறுகிறது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி யிடாத நாராயணசாமி புதுச்சேரியில் முதல்வரானார். அவர் இதில் போட்டியிடுகிறார். தொகுதியில் உள்ள 26 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என அறிவிக் கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வி.நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4 சுயேச்சைகள் என 8 பேர் களத்தில் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் சர்வீஸ் வாக்காளர்களுக்கு (ராணுவம் மற்றும் துணை ராணு வத்தில் பணியாற்றுபவர்கள்) மின்னஞ்சல் மூலமாக வாக்குச் சீட்டை அனுப்பும் ஆன்லைன் வாக்குப்பதிவு முறையை நாட்டிலேயே முதல்முறையாக நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை பாரிமுனை வங்கி கட்டிடத்தில் தீ விபத்து
சென்னை பாரிமுனையில் தனியார் வங்கிகள் இயங்கி வந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் தீ பிடித்தது. கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களில் 4 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை பாரிமுனை ஜஹாங்கீர் சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ பிடித்தது. 4 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில், யெஸ் பேங்க், பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ், கத்தோலிக்க சிரியன் வங்கி, கோட்டக் மகேந்திரா, ஆர்பிஎல் ஆகிய 5 வங்கிகள் உள்ளன.
இந்நிலையில், இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தண்ணீர் லாரிகள், 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வங்கியின் மேல் தளத்தில் சிக்கியிருப்பவர்களை கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றார்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த இடம் முழுக்க கரும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
மக்கள் கூட்டமாக கூடி தீயணைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து தடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவிப்பு:சென்னையில் அதிரை சகோதரி வபாத்
அதிராம்பட்டினம், நடுத்தெரு - மேட்டுப்பகுதியை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி LMS அப்துல் ஜப்பார் மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி LMS அப்துல் சமது மரைக்காயர் அவர்களின் மருமகளும், ஹாஜி A.S சேக் தம்பி மரைக்காயர் அவர்களின் மனைவியும், A.J இர்ஷாத் அகமது, A.J அப்துல் ரஹ்மான் ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா கதிஜா அம்மாள் அவர்கள் இன்று மாலை சென்னை மண்ணடிப் அங்கப்பன் நாயகன் தெரு பகுதி இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை ( 16-11-2016 ) காலை 8 மணிக்கு சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை ( 16-11-2016 ) காலை 8 மணிக்கு சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
அதிரையில் இன்று மாலை புதிய ஏடிஎம் திறப்பு !
இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் பணத்தை எடுத்துவருகின்றனர். இம்மையத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா அட்டைதாரர்களுக்கு ரூ. 2500 ம், பிற வங்கி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 ம் எடுத்துக்கொள்ள
அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதிரை காவல் நிலையம் திடீர் முற்றுகை போராட்டம்!
அதிரையில் தொடர்ந்து வெளிநாட்டுக்கு செல்லும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்குமேல் பெண் ஒருவரின் பாஸ்போர்ட் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறி தமுமுகவினர் இன்று காலை காவல்நிலையத்தில் முற்றுகையிட்டுள்ளனர் இதுகுறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்த அதிரை
காவல்நிலையம் விரைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.