Wednesday, November 9, 2016

சனி, ஞாயிறுகளில் வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி


பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற வசதியாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இன்றும், நாளையும் ஏ.டி.எம்.கள் செயல்படாது என்ற நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இரண்டாவது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் தங்களது வழக்கமான பணி நேரத்தில் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment