Monday, December 12, 2016

வர்தா புயல்: காற்றின் வேகம் தாங்காமல் தடுமாறி விழுந்து 36 பேர் காயம்


சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் தற்போது சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. பிற்பகலில் பழவேற்காடு கும்மிடிப்பூண்டி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இரவு முதல் காலை வரை சென்னையில் 7.5 செமீ மழை பதிவாகியுள்ளது. 

முறிந்த விழுந்த மரம் 

காற்று பலமாக வீசுவதால் பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. காற்றின் வேகம் தாங்காமல் மரம் முறிந்து வீட்டில் மேல் விழுகிறது. அந்த வீட்டில் இருந்தவர்களின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. 

36 பேர் காயம்

புயல் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் பலர் வீட்டை விட்டு வெளியேறி இருசக்கர வாகனங்களில் பயணித்தனர். காற்றின் வேகம் தாங்காமல் பலரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதுவரை 36 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 



No comments:

Post a Comment