Sunday, December 11, 2016

அதிரையில் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை..!


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது அதிராம்பட்டினம் எனும் ஊர், இங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் ஊரில் உள்ள ஒரு சிலர் சொந்தமாக வாடகை கார் வேன் ஆகியவற்றை வாடகைக்கு ஒட்டி வருகினறனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டின் வாசல்களில் நிறுத்தபட்டிருந்த ஆட்டோ,கார்,வேன் உள்ளிட்ட 6 வாகனங்களை மர்ம நபர்கள் சிலர் உடைத்து சேதபடுத்தி உள்ளனர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிவாசல் அருகே நிறுத்தபட்டிருந்த கார்மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு தாக்கியுள்ளனர் இதனால் கார் முற்றிலும் சேதமாகியது இது குறித்து, காரின் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து தஞ்சையில் இருந்து மோப்பநாய் துஃபி வரவழைக்கப்பட்டு துப்பரியபட்டது. இதில் நீண்ட தூரம் ஓடிய அந்த நாய் ஒரு தர்கா அருகே சென்று உட்கார்ந்து கொண்டது இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள பழைய குற்றவாளிகளை போலீசார் சந்தேகித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

No comments:

Post a Comment