Monday, January 30, 2017

ஏடிஎம்மில் பிப்.1 முதல் பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாது.. "கரண்ட் அக்கவுண்ட்"டுக்கு மட்டும்! : ஆர்பிஐ அறிவிப்பு


வங்கி நடப்புக் கணக்கிலிருந்து ஏடிம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

வங்கி நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மற்றும் வங்கி நடப்புக் கணக்குகளிலிருந்து பணம் எடுப்பதற்கு இருந்து வந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

ஏடிஎம்-களிலிருந்து நடப்பு கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.10,000ஆக இருந்தது, தற்போது இந்த வரம்பு நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சேமிப்புக் கணக்குகளிலிருந்து வாரம் ரூ.24,000 எடுக்கும் கட்டுப்பாட்டில் மாற்றமில்லை. 

“சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இப்போதைக்கு நீடிக்கும், இந்தக் கட்டுப்பாடுகளும் விரைவில் நீக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்று மத்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

நவம்பர் 8-ம் தேதி பணமதிப்ப்பு நீக்கத்திற்கு முன்பு இருந்தது போல் வங்கிகள் தங்கள் ஏடிஎம்களிலிருந்து பணம் எடுப்பதற்கான தங்கள் சொந்த உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment