Saturday, January 21, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மற்றும் புறநகரில் 20 லட்சம் கடைகள் அடைப்பு: போக்குவரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Image result for சென்னை மற்றும் புறநகரில் 20 லட்சம் கடைகள் அடைப்பு:



ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமி ழகம் முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் நேற்று போராட் டங்கள் நடந்ததால் கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை, பொதிகை உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
இதனால் ரயில்கள் சுமார் 6 மணி நேரம் தாமதமாக சென்னை வந் தடைந்தன. திருச்சி மானா மதுரை, ராமேஸ்வரம் திருச்சி, மதுரை செங்கோட்டை உட்பட 11 ரயில்களின் நேற்றைய சேவை ரத்து செய்யப்பட்டது. இணை ரயில்கள் வருவதில் தாமதம் ஏற் பட்டதால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில் கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
இந்நிலையில், மளிகை, காய்கறி கடைகள், ஹோட்டல்கள், ஜவுளி, நகைக்கடைகள் உட்பட சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கடை கள் மூடப்பட்டிருந்தன. மூடப்பட்டி ருந்த கடைகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது. இதில், அந்த அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக் கிரமராஜா உட்பட ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர். இதே போல், தமிழகம் முழுவதும் திரையங்குகளில் நேற்று காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் திரை யரங்குகள் வெறிச்சோடி காணப் பட்டன. தமிழகம் முழுவதும் 18 ஆயி ரம் தனியார் பள்ளிகள் மூடப்பட்டி ருந்தன. ஆம்னி பேருந்து களும் நேற்று பகலில் இயக்கப் படவில்லை.
அரசு போக்குவரத்து ஊழியர் கள், ஆட்டோ தொழிற்சங்கங்களும் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சில பணிமனைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பெரும்பாலான தொழி லாளர்கள் பணிக்கு வராததால் 30 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையும் நேற்று குறைக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்லவன் இல்லம் அருகே நேற்று மாலையில் நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று, ஜல் லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சென்ற தொழிலாளர் கள், போதிய பேருந்து மற்றும் ரயில்சேவை இல்லாததால் வீட் டுக்கு திரும்பினர். பெரும்பாலான ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கவில்லை. லாரிகளின் சேவையும் நிறுத்தப்பட்டதால், சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப் பட்டது.
பெட்ரோல் பங்க் உரிமை யாளர்களும் பங்க்குகளை மூடி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் பொதுமக்கள், மாணவர் - இளைஞர் அமைப்புகள், திமுக சார்பில் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடை பெற்றன. இதனால் சென்னை கடற்கரை தாம்பரம், சென்னை கடற்கரை செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி, நிறுத்தி இயக்கப்பட்டன.
இதனால், சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.

No comments:

Post a Comment