Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது தடியடி நடக்கவில்லை எனக் கூறுவதா?- முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்

ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது தடியடி நடக்கவில்லை எனக் கூறியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது எங்கும் தடியடி நடத்தப்படவில்லை என அவர் கூறியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.
அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை தொலைக்காட்சிகளில் அனைவரும் பார்த்தோம். நானும் பார்ததேன். முதல்வர் பார்க்கவில்லை என கருதுகிறேன். எனவே, அவருக்கு அந்தக் கட்சியை போட்டு காண்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment