Saturday, January 21, 2017

ஜல்லிக்கட்டு: திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் | படம்: எல்.சீனிவாசன்.
திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் | படம்: யாகூப்

ஜல்லிக்கட்டு எந்த ஆண்டிலும் தடைபடாமல் நடைபெற மத்திய அரசு அறிவிக்கையில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வள்ளுவர் கோட்டம் முன்பு திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கழக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழகத்தில் இனி எந்த ஆண்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடைபட்டு விடாமல், ஒவ்வொரு பொங்கல் விழாவின் போதும் தொடர்ந்து நடக்க்கும் வகையில் மத்திய அரசு தனது அறிவிக்கையில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று (21-01-2017) காலை 8 மணி முதல் சென்னை, வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், திமுக தொண்டர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று தங்கள் உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment