Friday, February 17, 2017

அதிரையில் திமுக கூட்டணி கட்சியினர் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு !

அதிரையில் திமுக கூட்டணி கட்சியினர் கலந்தாலோசனைக்கூட்டம்  வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது தலைமை வகித்தார். 

அதிரை திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அதிரை பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேடுகள், நிரந்திர செயல் அலுவலர் நியமிப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் [ 22-02-2017 ] அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அதிரை பேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



( படங்கள் உதவி ஆசிப் )

No comments:

Post a Comment