Saturday, April 1, 2017

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்துக: முத்தரசன்


தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 3321 கடைகள் இன்று முதல் மூடப்பட உள்ளது. மீதமுள்ள மதுபானக் கடைகளையும் விரைவில் மூடுவதற்கு மாநில அரசு முன்வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை உடனடியாக மூடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமல்படுத்திட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்து ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவால் 3321 கடைகள் இன்று முதல் மூடப்பட உள்ளது. மீதமுள்ள மதுபானக் கடைகளையும் விரைவில் மூடுவதற்கு மாநில அரசு முன்வர வேண்டும்.
மதுபானக் கடைகள் மூடப்படும் அதே நேரத்தில், இங்கு பணி புரிந்து வரும் பணியாளர்களின் எதிர்கால வாழ்க்கை நலனை அரசு கவனத்தில் கொண்டு, அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்திட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment