Sunday, November 16, 2014

மழை நின்றதை தொடர்ந்து உற்சாகத்துடன் கடலுக்கு செல்லும் அதிரை மீனவர்கள் !

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் அதிரை கடலோரப்பகுதிகளில் சீற்றம் அதிகரித்து வந்தது. காற்றும் பலமாக வீசியதுடன் பலத்த மழையும் தொடர்ந்து பெய்தது. இதனால் அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் உள்ளிட்ட  மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்கு செல்லவில்லை.

இந்த பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை தற்போது நின்று போனதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடற்கரை பகுதி மீண்டும் பரபரப்பானது. மீனவர்கள் சில நாள்களுக்கு பின் மீன்பிடிக்கச் செல்வதால் கடலில் அதிக மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment