Friday, December 19, 2014

தத்தளிக்கும் பிலால் நகர்-மீட்குமா ஏரிபுரகரை ஊராட்சி

அதிரைக்கு அருகில் இருக்கும் பிலால் நகர் பகுதி தற்போது பெய்து வரும் கன மழையால் வெள்ளத்தால் முழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.இந்த பகுதியில் ரோடுகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரம படுகின்றனர்.செடியன் குளம் நிரம்பி வழிந்து அந்த நீர் முழுவதும் பிலால் நகர் பகுதி முழுவதும் சூழ்ந்து உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் ஏரிப்புரை ஊராட்சி நிர்வாகம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.இதனை அந்த பகுதி கவுன்சலர் உடனடியாக ஏரிப்புரகரை ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.





No comments:

Post a Comment