Monday, September 26, 2016

​காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது காலணி வீசிப்பட்டதால் பரபரப்பு!

உத்தரபிரதேத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது காலணி வீச்சப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளை நேரில் சந்திக்கும் பேரணி ஒன்றை, மாநிலம் முழுவதும் மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில் சீதாப்பூரியில் திறந்தவெளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் ராகுல்காந்தியை நோக்கி காலணியை வீசினார். இருப்பினும் அந்த காலணி, ராகுல்காந்தி மீது படாமல், அவர் சென்ற வாகனத்திற்கு விழுந்தது. 
இதனையடுத்து காலணியை வீசிய இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment