அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் 125 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்



தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

கடந்த 29 ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறுவது தொடங்கியது முதல் நாள் வியாழக்கிழமை அன்று 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் அளித்தனர். அதன்பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திமுகவினர் 14 வார்டுகளுக்கும், மனிதநேய மக்கள் கட்சியினர் 4 வார்டுகளுக்கும், சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 31 பேர் வேட்பு மனுக்கள் அளித்தனர். வேட்பு மனுக்கள் அளிப்பது கடைசி நாளான இன்று திங்கட்கிழமை அதிமுகவினர் 21 வார்டுகளுக்கும், எஸ்டிபிஐ கட்சியினர் 5 வார்டுகளுக்கும், மஜக 1 வார்டுக்கும், பிஜேபி கட்சியினர் 3 வார்டுகளுக்கும், சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 86 பேர் வேட்பு மனுக்கள் அளித்தனர்.

இதுவரையில் மொத்தம் 125 பேர் வேட்பு மனுக்கள் அளித்துள்ளனர். வேட்புமனுக்கள் நாளை 4ம் தேதி ஆய்வு செய்யப்படுகிறது. 6 ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். 
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook