Tuesday, October 25, 2016

தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்.28-ம் தேதி ஊதியம்




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 28-ம் தேதி ஊதியம் வழங்க முடிவெடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதத்தின் இறுதிநாள் அந்த மாதத்துக்கான ஊதியம், கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மூலம் வங்கிக்கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மாதம் 29-ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. எனவே, தீபாவளியை கொண்டாடும் வகையில், அக்டோபர் மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த கோரிக்கையை ஏற்று, இம்மாதம் 28-ம் தேதி, அதாவது தீபாவளிக்கு முந்தைய நாளே அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்த அரசு முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து அதற்கான அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு ஊழியர்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment