Tuesday, October 25, 2016

கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு: திமுக தகவல்



திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ ஒவ்வாமை காரணமாக ஓய்வில் இருப்பதால் பார்வையாளர்கள் அவரைக் காண வருவதை தவிர்க்குமாறு கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
எனவே பார்வையாளர்கள் அவரைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment