Wednesday, February 22, 2017

அதிரையின் அடிப்படை வ‍சதிகள் வலியுறுத்தி அதிரை பேரூராட்சி முன்பாக திமுக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் !





திராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேடுகள், நிரந்திர செயல் அலுவலர் நியமிப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 6 கட்சியினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் புதன்கிழமை காலை அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்பாக நடைபெற்றது.
இதில் திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன்,  காங்கிரஸ் கட்சி பொருளாளர் நாராயண சாமி,  தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக செயலாளர் அதிரை அஹமது ஹாஜா, அதிரை பேரூர் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் என். காளிதாஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment