Wednesday, January 3, 2018

மக்கள் நலன் கருதி பொங்கலுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கம் -அமைச்சர் அறிவிப்பு


பொங்கல் பண்டிகையை ஒட்டி 3 நாட்களுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்ப 3,770 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: பொங்கலுக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், அண்ணாநகர், சைதாப்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. 

சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் வரும் 9ஆம் தேதி முதல் செயல்படும்.சென்னையில் இருந்து ஜன 11,12,13-ம்  தேதி தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை காலத்தையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தாம்பரம், கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதுதொடர்பாக ஆய்வு செய்துள்ளோம். எந்தெந்த ஊர்களுக்கு எங்கு பஸ் நிறுத்தம்: ஆந்திரா: செங்குன்றம்  வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில  பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து  நிலையத்தில் இருந்து புறப்படும்.

29 சிறப்பு முன்பதிவு கவுன்டர்:

300  கிமீ தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பஸ்களில் பயணிக்க விரும்புவோர்  www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். கனிணி மூலம் உடனடி தள  முன் பதிவு (online ticket reservation system) செய்யும் வகையில்,  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள்.  தாம்பரம் சானடோரியத்தில் 2, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் 1 என மொத்தம்  29 சிறப்பு கவுன்டர்கள் வரும் 9-ம் தேதி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment