Sunday, January 7, 2018

வெவ்வேறு விபத்துகளில் மாநகரப் பேருந்து மோதி 2 பேர் பலி

சென்னை சந்தோம் அருகே மாநகரப் பேருந்து மோதி பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஓட்டியவர் தற்காலிக டிரைவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரின் பெயர் அஜீத்குமார் என்பதாகும். 18 வயதான இவர் பட்டினப்பாக்கத்தில் வசித்து வந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த போது சாந்தோம் அருகே வேகமாக வந்த அரசு மாநகர பேருந்து மீது மோதினார்.
சம்பவ இடத்திலேயே அஜீத்குமார் உயிரிழந்தார். விபத்தை தொடர்ந்து சாந்தோம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் அஜீத்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் 4வது நாளாக இன்று தொடரும் நிலையில், பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்தியவர் தற்காலிக டிரைவரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தற்காலிக டிரைவர்தான் என்பது தெரியவந்துள்ளது. 

தற்காலிக டிரைவர்களால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. 

விருத்தாசலம் அருகே தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மோதி 37 வயதான சியான் என்பவர் உயிரிழந்தார். மேலும் 7 வயது சிறுமி சாரா, சாமுவேல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலிக டிரைவர்கள் இயக்கும் பேருந்துகள் நேற்று சிறு சிறு விபத்துகளில் சிக்கிய நிலையில் இன்று பயணிகள் உயிரிழக்கும் அளவிற்கு விபத்துக்கள் ஏற்பட்டுள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Saturday, January 6, 2018

3-வதுநாளாக தமிழகம் முழுவதும் தடையை மீறி தொடரும் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் - மக்கள் அவதி


புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. மாநிலம் முழுவதும் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஊதிய உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியப் பலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அமைச்சர் பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. தங்கள் கோரிக்கைக்காக பல விதமான போராட்டங்களை நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் இறுதிகட்டமாக நேற்றுமுன்தினம் நடந்த பேச்சு வார்த்தையைக் கெடுவாக வைத்தனர்.
2.57 சதவீத உயர்வை தர மறுத்த தமிழக அரசு 2.4 சதவீதத்திலேயே நின்றது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். அவர்களது வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பேருந்துகள் இயங்கவில்லை.
90 சதவீத பேருந்துகள் இன்று இயங்காததால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை, மதுரை, கோவை என தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்றும் பேருந்து சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். வெளியூர், உள்ளூர் என அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
எனினும் தற்காலிக ஊழியர்கள் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களால் சில பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் பயணத்திற்கு ஷேர் ஆட்டோ மற்றும் வேன்களுக்காக காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. அரசு பேருந்துகள் இயக்கப்படாதததால்,,சென்னை புறநகர் மின்சார ரயில்களில் வழக்கத்தைவிடவும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கங்களுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அதேசமயம் தங்களின்
கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆனால் தற்காலிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தி பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் தற்காலிக ஊழியர்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.
இதனிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முத்தலாக் சட்டம்: முஸ்லீம்கள் போரட்டால் தினறும் தமிழகம்

முத்தலாக் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஜமாத்துல் உலமா சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களில் நடைபெற்றன.

இதில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மாற்றுமத சகோதரர்கள் என் அனைவரும் கலந்துகொண்டு மத்தியில் அளும் காவி  அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

(படங்கள்)












Friday, January 5, 2018

பட்டுக்கோட்டை யில் முத்தலாக் மசோதா எதிர்ப்பு ஆர்பாட்டம்..


மத்திய அரசால் கொண்டுவந்துள்ள முத்தலாக் மசோதாவுக்கு கண்டன எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம். பொதுக்கூட்டத்தை நடத்த ஜமாத்துல் உலமா சபை முடிவு செய்தது உள்ளது. இதையடுத்து இன்று பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில்  ஜும்மா தொழுகைக்கு பிறகு பகல் 2 மணியளவில் இந்த கண்டன பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் 32க்கும் அதிகமான பேருந்துகளில் இருந்து ஏராளமான அதிரையர்கள் பட்டுக்கோட்டையை நோக்கி படையெடுத்து வருகின்றர். 





Thursday, January 4, 2018

வரும் வெள்ளிக் கிழமை அதிரையில் உள்ள அனைத்து ஜும்மாக்களும் 15 நிமிடம் முன்பாக முடிந்து விடும்......

வெள்ளிக் கிழமை (29.12.2017) அன்று இஷா தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் அக்ஸா மரைக்காப் பள்ளியில் வருகின்ற வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டையில் ஜும்மாவுக்கு பிறகு மத்திய அரசு கொண்ட வர துடிக்கும் முத்தலாக் சட்டத்திற்க்கு எதிராக.

ஜமாத்துல் உலமா சபை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு செல்வதற்க்கான முடிவு செய்யப்பட்டு இருந்தது அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன அனைத்து முஹல்லாவில் வாகனங்களும் வண்டிப் பேட்டையிலிருந்து  மொத்தமாக நேரம் ஜும்மாவுக்கு பிறகு 2:30 மணியளவில் புறப்படுவதாக கூறியுள்ளனர்.

அதிகமானோர் கலந்துக் கொண்டு சிறப்பித்து தருமாறு அழைத்துள்ளனர்

எனவே இக்கூட்டத்தின் காரனமாக வருகின்ற வாரம் அதிரையில் அனைத்து ஜும்ஆ_க்களும் 15நிமிடம் முன்பாகவே நிறைவு பெறும். எனவே விரைந்து நேரத்துடன் தொழுகைக்கு வருமாறு அதிரை அனைத்து முஹ்ஹால்லஹ் சார்பாக தெரிவித்துள்ளனர்.

Wednesday, January 3, 2018

மக்கள் நலன் கருதி பொங்கலுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கம் -அமைச்சர் அறிவிப்பு


பொங்கல் பண்டிகையை ஒட்டி 3 நாட்களுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்ப 3,770 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: பொங்கலுக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், அண்ணாநகர், சைதாப்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. 

சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் வரும் 9ஆம் தேதி முதல் செயல்படும்.சென்னையில் இருந்து ஜன 11,12,13-ம்  தேதி தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை காலத்தையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தாம்பரம், கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதுதொடர்பாக ஆய்வு செய்துள்ளோம். எந்தெந்த ஊர்களுக்கு எங்கு பஸ் நிறுத்தம்: ஆந்திரா: செங்குன்றம்  வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில  பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து  நிலையத்தில் இருந்து புறப்படும்.

29 சிறப்பு முன்பதிவு கவுன்டர்:

300  கிமீ தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பஸ்களில் பயணிக்க விரும்புவோர்  www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். கனிணி மூலம் உடனடி தள  முன் பதிவு (online ticket reservation system) செய்யும் வகையில்,  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள்.  தாம்பரம் சானடோரியத்தில் 2, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் 1 என மொத்தம்  29 சிறப்பு கவுன்டர்கள் வரும் 9-ம் தேதி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு


மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது  ஆட்சியர் தலைமையிலான இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், எஸ்.பி. ஆகியோர் பங்கேற்றனர் . பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர்  உள்ளிட்ட ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்,  அதன்படி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 14ல் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மேலும் பாலமேட்டில் ஜனவரி 15ல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அலங்காநல்லூரில் 16ல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3மணி வரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை பரிசோதனை செய்ய 6 மருத்துவர்களை கொண்ட 10 மருத்துவக்குழு அமைக்கப்படும் என்றும் மாடுபிடி வீரர்களை பரிசோதிக்கவும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் 4 அடி உயரமும், 3 வயது நிரம்பியதாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 


7மணி நேரம் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் அனுமதி தரப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் மாடுபிடிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளார். பாதுகாப்பு பணிக்காக சுமார் 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 3 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்கும் என அறிவித்துள்ளார். அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tuesday, January 2, 2018

அதிரை பைத்துல்மால் மாதாந்திரக் கூட்டம் (நேரடி அறிக்கை)

அதிராம்பட்டினம் பைத்துல்மால் டிசம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அலுவலகத்தில் அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் தலைமையில் நடைபெற்றது.இதில் கடந்த டிசம்பர் மாதம் 216 நபர்களுக்கு 1.26 லட்சம் பென்சன் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





( விவரங்கள்)





அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அரியலூர் கலெக்டர்!


அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ப்ரியா, அரசு மருத்துவமனையில் குடல் வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 1500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனக்கு அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு நேற்றிரவு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியராக உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சேராமல், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றது பாராட்டுகளை பெற்றுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாலனோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசியல்வாதிகளும் அரசு உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள் என்றால் அது தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் செய்தியாகிவிடுகிறது.

தஞ்சையில் பரபரப்பு : ஆளுநருக்கு எதிராக திமுகவினர் கறுப்புக்கொடி போராட்டம்


தஞ்சையில் ஆய்வு நடத்துவதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு டி.ஆர்.பாலு தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கருப்புக்கொடி காட்டி எதரிப்பு தெரிவித்தனர்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். கோயமுத்தூர், கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் அவர், அங்குள்ள பகுதிகளை பார்வையிட்டு அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை தஞ்சை மாவட்டத்தை ஆய்வு செய்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை புரிந்தார்.
ஏற்கனவே, ஆளுங்கட்சியான அதிமுகவை தவிர மற்ற பெரும்பாலான அரசியல் கட்சிகள், கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தஞ்சையில் ஆய்வு செய்ய வந்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டி.ஆர் பாலு தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏற்கனவே, குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்த கவர்னருக்கு எதிராக இரண்டு காவல்நிலையத்தில் இரண்டு புகார் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.