மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 37.5 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலை ஏற்றத்துக்கு பிறகு மானிய விலை அல்லாத 14.2 கிலோ சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.525.50 ஆக இருந்தது.
கொல்கத்தாவில் ரூ. 551-க்கும், மும்பையில் ரூ. 531-க்கும், சென்னையில் ரூ. 538.50 ஆகவும் விற்கப்படும் என்று ஐஓசி தெரிவித்துள்ளது.
இதேபோல மானிய விலை எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 2 உயர்த்தப்பட்டு, டெல்லியில் ரூ. 430.64-க்கும், கொல்கத்தாவில் ரூ. 432.64-க்கும், மும்பையில் ரூ. 460.27 ஆகவும் விற்கப்படுகிறது. சென்னையில் மானிய சிலிண்டரின் விலை ரூ. 418. 14 ஆக விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment