காலாண்டர் என்பது நம் வாழ்க்கை தேவைகளை முன் வைத்து நாட்கள் மற்றும் கிழமை மாதம் வருடம் ஆகியவற்றை அறிந்து கொள்ள காலாண்டர் தேவைப்படுகிறது. இதை அதிகமானோர் அன்பளிப்பாக கொடுப்பது வழக்கம். அந்த காலாண்டர் மாதக்காலாண்டர் என்றும் தினசரி காலாண்டர் என்றும் வினியோகம் செய்யப்படுகிறது. அனேகமானோர் தினசரி காலாண்டரை கொடுத்து வருகிறார்கள். காலாண்டர் அச்சடிக்கப்படுகிற கம்பெணி அதிகமானோர் மாற்றுமதத்தினர்.
ஒரு சில கம்பெணிகளே இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்ளால் அச்சடிக்கப்டுகிற ஒரு சில நிறுவனத்தினர் குர்ஆண் ஹதீஸின் மொழி பெயர்பை குறிப்பிட்டு அச்சடிக்கிறார்கள் இதனால் அல்லாஹ்வுடைய பெயரும் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பெயரும் கீழே கிழித்து கிடப்பதை நாம் பார்த்துவருகிறோம் இது அவமரியாதை செயல் இதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
பெரும்பாலான காலாண்டரில் நம் மார்க்கத்திற்கு எதிரானவைகளாகிய உருவங்கள், விஷே நாட்கள், நல்ல நேரம், கெட்டநேரம் என்றும் இராசிபலன் என்ற பெயரிலும் அதில் உள்ளது. இதை எத்தனையோ மஸ்ஜிதுகளில் வீடுகளின் மாட்டப்பட்டுள்ளதை நாம் பார்த்து வருகிறோம் மேலும்; இராசிபலன் உள்ள காலாண்டரை வீட்டில் / மஸ்ஜித்களில் வைத்திருப்பது மிகப் பெரிய பாவம் இதை முற்றிலும் நாம் தவிர்க்க வேண்டும்.
அன்பளிப்பாக கொடுக்கும் நிறுவனத்தினரே ! வியாபாரிகளே ! நாம் மிகவும் கண்கானித்து பார்த்து வாங்க வேண்டும். அன்பளிப்பாக வாங்கும் வாடிக்கையாளர்களே! நாமும் மிகவும் கண் காணிக்கவேண்டும். மஸ்ஜிது நிறுவாகிகளே இது போன்ற காலாண்டரை மஸ்ஜிதுகளில் பொறுத்த அனுமதியளிக்க வேண்டாம்
No comments:
Post a Comment