வார்தா புயல் எப்போது கரை கடக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, "வார்தா புயல் இன்று காலை 9.30 மணியளவில் சென்னைக்கு கிழக்கே 87 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தற்போது அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வார்தா புயலானது இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கு. இதனால் தெற்கு ஆந்திரா, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக 1 கி.மீ. உயரத்துக்கு எழக்கூடும்.
புயல் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் கரையைக் கடந்து பிறகும் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் ஒரு சில மணி நேரங்களுக்கு பலத்த காற்று வீசும். புயல் கரையைக் கடந்த 6 மணி நேரத்துக்குப் பின்னர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை, அதிகனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோல் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்றார்.
No comments:
Post a Comment